திண்டுக்கல்: கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டு வளாகத்துக்கு சென்ற எஸ்.பி, எந்தெந்த இடங்கள் முக்கியமானவை என்று போலீசாரிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு துப்பாக்கி ஏந்தியபடி எத்தனை போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். 

அதன்படி, இன்று (டிசம்பர் 24) முதல் கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி