திண்டுக்கல், வத்தலக்குண்டு, விருவீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரிடம் நிலக்கோட்டையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் மாரிமுத்து தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கித்தர முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து ராஜேந்திரன், தனது மகன்கள் மற்றும் தம்பி மகன் ஆகிய 3 பேருக்கு வேலை வாங்கி தரும்படி கூறியதை தொடர்ந்து கரூரை சேர்ந்த குமார், மனைவி பூமகள் உள்பட 6 பேரை ராஜேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ. 36 லட்சத்து 10 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு 3 பேருக்கும் பொதுப்பணித்துறை பணியிடத்துக்கான பணி நியமன ஆணையும் வழங்கினர்.
அவற்றை பெற்ற 3 பேரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த ஆணை குறித்து விசாரித்தபோது தான் அது போலி பணிநியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்பிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில் மாரிமுத்து உள்பட 6 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.