திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி நதிவர்ஷினி (19) உடல்நலக் கோளாறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.