நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையோரத்தில் புதிய கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணியின்போது, சின்னாளபட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகப் பாய்ந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே குடிநீர்க் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதைக் கண்காணித்து, சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து, சின்னாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி கூறுகையில், நிலக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். இன்று சரி செய்யப்படும் என்றார் அவர்.