வத்தலகுண்டு: கஞ்சா விற்பனை; பெண் உள்பட மூவா் கைது

வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்த  சுபாஷ் (40),  ஜோதி (43), மனோஜ்குமார் (28) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி