திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் போடிகாமன்வாடி ஊராட்சிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம், போடிகாமன்வாடி, வீரசிக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு சென்று அதே இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு வழங்கினார்.
அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தமிழகத்தில் மக்கள் நலனுக்காக குறிப்பாக பெண் சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்தும் திராவிட மாடல் ஆட்சி திமுக தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியின் போது தான் இப்பகுதியில் தார்சாலைகள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், மற்றும் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டிகள் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.