திண்டுக்கல்: தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் நகர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள 125 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. AMC ரோடு பகுதியில் உள்ள கடையில் லோகநாதன் (38) என்பவர் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததை தொடர்ந்து, பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தொடர்புடைய செய்தி