திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, காரில் இருந்தவர்கள் போலீசார் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்து தப்பிச் சென்றனர். போலீசார் துரத்திச் சென்றதில் காரை விட்டு இறங்கி ஓடினர். காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த வினோத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.