ஆத்தூர்: ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த திருநங்கை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை டட்லிகா முத்தீஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினார். மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தான் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் திண்டுக்கல் தனியார் பள்ளியில் நிர்வாக ஆசிரியராக தற்காலிக பணி செய்து வருவதாகவும் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள அங்கன்வாடி ஆசிரியர் பணிக்காக ரெட்டியார்சத்திரம் ஊராட்சியில் மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியதாகவும் மனு வாங்கும் போது அதிகாரிகள் பல்வேறு நபர்களை தொலைபேசியில் அழைத்து மூன்றாம் பாலினத்தவருக்கு மனு வாங்கலாமா என்று கேட்டுவிட்டு மனுவை வாங்கினார். 

மனுவை வாங்கி ஒரு வாரத்தில் இந்த பணியானது பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்பட மாட்டாது என கூறி நிராகரித்துள்ளனர். தமிழக அரசு திருநங்கைகள் படித்து அரசு பணிக்கு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன ஆனால் திருநங்கைகளுக்கு எங்கும் முன்னுரிமை வழங்குவது இல்லை. அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பெயருக்கு திருநங்கைக்கு முன்னுரிமை வழங்குவதாக கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி