ஆத்தூர்: தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி

தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் விவசாயம் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் வட்டாரத்தில் களப்பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குழுவின் பொறுப்பு ஆசிரியர்களான வேளாண் பொருளாதார துணை பேராசிரியர்கள் நர்மதா, கோகுலபிரியா வழிகாட்டுதலின்படி கல்லூரி மாணவர்கள் ஏ. வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் என்பவருக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை இலவசமாக வழங்கினர். மேலும் அவருக்கு தேனீ வளர்ப்பு முறைகள் பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு அவர்களுக்குத் தகுந்தவாறு பயிற்சி அளித்து வருகின்றனர் மாணவர்கள்.

தொடர்புடைய செய்தி