ஆத்தூர்: சிவசுப்ரமணியர் கோயிலில் மூலவருக்கு இராஜ அலங்காரம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சிவசுப்ரமணியர் கோவிலில் மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்களுடன் இராஜ அலங்காரம் செய்திருந்தனர். உற்சவ முருகப்பெருமானுக்கு மலர்களை கொண்டு அலங்காரம் செய்த முன் மண்டகப்படியில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைத்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கடைவீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீசிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவரான சிவசுப்பிரமணியருக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, மாபொடி, மஞ்சள்பொடி, பன்னீர், இளநீர், விபூதி, உட்பட சுவாமிக்கு 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். முன் மண்டகப்படியில் உற்சவ பெருமாளானா முருகப் பெருமானுக்கு வள்ளி தேவசேனையுடன் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் தரிசனத்திற்காக வைத்திருந்தனர். அதிகாலை முதல் கோவிலில் கூட்டம் அலைமோதியது. சின்னாளபட்டி, செம்பட்டி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, திண்டுக்கல் உட்பட பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி