ஆத்தூர்: விஷ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த 6 பேர் கைது

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட எல்லைகளான கொடைரோடு சுங்கச்சாவடியில் பல மாவட்டங்களில் இருந்து மதுரை நோக்கி வரும் கார் மற்றும் பேருந்துகள் திண்டுக்கல்லிருந்து வரும் வாகனங்களையும் நிலக்கோட்டை DSP செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் பலத்த சோதனைக்குப் பின் அனுமதித்து வருகின்றனர்.

 இந்நிலையில் பழனியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அந்த பேருந்தில் கன்னியாகுமரி சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைதலைவர் ராமசற்குணம் தலைமையில் 6 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி