பிளஸ் -2 அரசு பொதுத் தேர்வில் திண்டுக்கல் பொன் சீனிவாசன் தெருவை சேர்ந்த தச்சுத்தொழிலாளி சரவணகுமார் மகள் நந்தினி 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாணவி நந்தினிக்கு பாராட்டு விழா திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.
தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பாராட்டி கேடயம் வழங்கி ரூ. 50, 000 நிதி உதவி அளித்தார். இதில் மாநிலச் செயலாளர் சீனிவாசன், விஸ்வகர்ம அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், மாநிலத் துணைத் தலைவர் நாகராஜன், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், விஸ்வகர்ம இளைஞர் சபா தலைவர் சின்னு மற்றும் அகில பாரத விஸ்வகர்ம உறவு நிர்வாகிகள் கோபிநாதன், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.