கொடைக்கானல்: நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடூர கொலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் பங்களாவில் வசித்து வந்த நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன், மர்ம நபர்களால் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு, வாய், மூக்கு முழுவதும் டேப்பால் சுற்றப்பட்ட நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம், சிசிடிவி, ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது. இச்சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி