நடிகை ரோஜா பாதாள செம்பு முருகன் கோயிலில் சாமி தரிசனம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா, திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் உள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு நேற்று (பிப்.22) வருகை புரிந்தார். பாதாள செம்பு முருகனுக்கு 8 கருங்காலி மாலை சாற்றினார். நடிகை ரோஜாவும் தனக்காக ஒரு கருங்காலி மாலை வாங்கி அணிந்து கொண்டார். கோயிலின் சார்பாக நடிகை ரோஜாவுக்கும் அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி