திண்டுக்கல்: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதுரை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், நிலக்கரி ஏற்றச் சென்ற டிப்பர் லாரி, தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரியின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. ஓட்டுநர் சக்திவேல் லாரிக்குள் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டுள்ளனர். தெய்வேந்திரன் என்பவருக்கு சொந்தமான இந்த டிப்பர் லாரி, நிலக்கரி ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி