திண்டுக்கல்: சாமி கும்பிட்டபோது சூடம் உடலில் விழுந்து விபரீதம்

திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டி, பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்த பெயிண்டர் ராஜ்குமார் (54), சாமி கும்பிடும்போது எதிர்பாராதவிதமாக சூடம் அவர் உடலில் விழுந்து தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி