ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழப்பு

ஆத்தூர் அக்ரஹாரத்தில் மழைநீர் தேங்கியதால், அதை வெளியேற்ற முயன்ற கட்டடத் தொழிலாளி கருப்பையா, அவரது மனைவி சுதா, மற்றும் மாணவர் சுப்பிரமணியசிவா ஆகியோர் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆத்தூர் கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி