மருதாநதி அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடுப்பு

ஆத்தூர் அருகே உள்ள மருதாநதி அணையில் உள்நாட்டு மீன் உற்பத்தியைப் பெருக்கவும், பொதுமக்களின் புரதச் சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ஒரு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன் தலைமையில், அணையில் 40,000 ரோகு வகை மீன்கள் மற்றும் 1,60,000 சாதா கெண்டை வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இந்தத் திட்டம் மீன்களின் வளர்ச்சி மற்றும் நீர்நிலை தன்மைக்கு ஏற்ப பல்வேறு இனங்களைத் தேர்வு செய்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி