திண்டுக்கல்: சட்டவிரோத மது விற்பனை.. 2 பேர் கைது

திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் தலைமையில், பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற காளிரத்தினம் (49) மற்றும் நத்தம் ரோடு அருகே மதுபானம் விற்ற ஜெயராமன் (70) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 76 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி