நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திண்டுக்கல் லியோனி கண்டனம்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சமீபத்தில் தவெக தலைவர் விஜயை சர்ச்சைக்குறிய வகையில் விமர்சித்திருந்தார். இதற்கு, திமுக நிர்வாகி திண்டுக்கல் லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அது ஒரு பெண்களை இழிவுபடுத்தக்கூடிய கருத்து. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கக்கூடாது. உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார். முன்னதாக, பல்வேறு கட்சி தலைவர்கள் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி