தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கரூரில் இன்று (நவ.22) நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அரசியல் ரீதியான எந்த விவாதங்களும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு