இந்திய அரசியலமைப்பின் டிஜிட்டல் வெளியீடு

அரசியலமைப்பு தினத்தைக் குறிக்கும் தேசிய விழாவிற்கு இன்று (நவ., 26) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கினார். டெல்லியில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் 9 இந்திய மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் டிஜிட்டல் வெளியீடு இடம்பெற்றது. மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா மற்றும் அசாமி ஆகிய மொழிகளில் அரசியலமைப்புச் சட்டம் வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி