தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றுகள் இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள சட்ட திருத்தங்களை முன்னரே சுட்டிக்காட்டி தற்போது அமல்படுத்த முடியாது எனவும், வழக்கு முடியும் வரை பழைய முறைப்படி சான்றிதழ்களை நேரில் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
நன்றி:News18