25 காவலர்களுக்கு டி.ஐ.ஜி. சரவணன் நற்பணிச் சான்றிதழ் வழங்கி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கில், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை விரைந்து கைது செய்த 25 காவல் அதிகாரிகளுக்குத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி சரவணன் நற்பணிச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். சிறப்பான புலனாய்வு மூலம் கொலையாளியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களின் அர்ப்பணிப்பான பணியைப் போற்றும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி