"விவசாயிகளின் அழுகுரல் பிரதமருக்கு கேட்கவில்லையா?" - முதலமைச்சர் காட்டம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்றுள்ளார். தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமருக்கு கேட்கவில்லை. விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை?. கண்ணீர் ஏன் தெரியவில்லை?” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி