திருபுவனம் அருகே காவல்துறையினர் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் இன்று (ஜூலை 2) நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், அஜித் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அஜித்தின் தாயார், “ஸ்டாலின், எடப்பாடி போன்று விஜய் போனில் ஆறுதல் கூறுவார் என நினைத்தோம். ஆனால் அவர் நேரில் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.