பாஜக கூட்டணியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, நீட் விலக்கு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒருமுறையாவது பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியது உண்டா? அண்ணா பெயரில் கட்சி நடத்தும் இவர்கள், அவரது இருமொழிக் கொள்கையைக் காக்கத் தவறிவிட்டனர். மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, மாநில முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாகக் காட்டுகிறார் என இபிஎஸ்-ன் விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.