டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டிரம்புடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இந்நிலையில், அவர் 'கெட்டமைன்' போதைப்பொருள் பயன்படுத்துவதால், சிறுநீர்ப்பை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் சில நாட்களுக்கு முன் தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த எலான் மஸ்க், "போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானது" என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.