முதலமைச்சர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, நீலாங்கரை வீட்டில் வசிக்கக் கோரிய வழக்கு, ஜீவனாம்சம் கோரிய வழக்கு என சங்கீதா தொடுத்திருந்த 3 வழக்குகளையும் அவர் வாபஸ் பெற்றுள்ளார். மேலும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை பற்றி அண்மையில் ஊடகத்தில் நேர்மறையாகப் பேசியதும் பேசுபொருளானது. சங்கீதா தனது கணவருக்கு எதிராக தவறாக வழக்கு தொடுத்ததாக மன்னிப்புக் கேட்டதாகவும் ஒரு பெண் வழக்கறிஞர் பேட்டியளித்துள்ளார். இருப்பினும் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்பதில் தெளிவில்லை.