கடந்த மார்ச் மாதம் வெளியாகி திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்ற 'துரந்தர்-2' திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. உலகளவில் இதுவரை ரூ.1,813 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இத்திரைப்படத்தின் 'அன்கட்' பதிப்பு, தற்போது நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது. மேலும், திரையரங்குகளை தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் இத்திரைப்படம் சாதனை மைல்கற்களை எட்டும் என்று திரையுலக வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.