2020-லேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, IPL போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு IPL போட்டி முடிந்தவுடன், தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த CSK இயக்குனர் காசி விஸ்வநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஓய்வு குறித்து தோனி யாரிடமும் பேச மாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான்" என்றார்.