அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிஎஸ்கே பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். விளையாடுவது குறித்த இறுதி முடிவை தோனியே எடுப்பார் என்றும், அவரது அனுபவம் இளம் வீரர்களுக்குப் பக்கபலமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தோனி தொடர்ந்து அணிக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் சிம்மன்ஸ் பாராட்டியுள்ளார்.