பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக MLA-க்கள் கூட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில் நேற்றும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியுடன் உடன் அவருக்கு மோதல் போக்கு தொடர்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இரண்டாவது தர்மயுத்தம் அதிமுகவில் தொடங்கலாம் என கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் பரபரப்பு நிலவுகிறது.