கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மத்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரி ஓட்டுநர் திரு. குமார் (வயது-32), த. பெ. மாது, சிவம்பட்டி கிராமம் என்பவரும், பேருந்து ஓட்டுநர் திரு. பரமசிவம் (வயது-56), நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம் என்பவரும் இறந்து விட்டனர். மேலும் காயமடைந்த சுமார் 30 பேர்களுக்கு மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தனியார் மற்றும் அரசு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட மீட்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குனர் நலப் பணிகள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.