தொப்பூர்: விபத்துக்குள்ளான காரில் குட்கா பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையம்பட்டி சாலையில் நேற்று(அக்டோபர் 05) மாலை சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக தொப்பூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் காவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது காருக்குள் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சத்தி 76 ஆயிரம் மதிப்புள்ள 260 கிலோ குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காரில் வந்தவர்கள் தலை மறைவான நிலையில் காவலர்கள் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி