பென்னாகரம்: ஒகேனக்கல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தேவர் ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் அவருக்குத் திதி கொடுப்பதற்காக அவரது உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் பிப்ரவரி 20 நேற்று பிற்பகல் ஒகேனக்கல் வந்தடைந்தனர். அப்போது ராஜேந்திரன் மற்றும் அவரது பேரன் விக்னேஷ் இருவரும் ஒகேனக்கல் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்வதற்காக நீந்திக் கொண்டு சென்றபோது ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கூச்சலிட்டதை அடுத்து அருகாமையில் இருந்தவர்கள் ராஜேந்திரனை பத்திரமாக மீட்டனர். ஆனால் விக்னேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். 

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேசைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காயம் அடைந்த ராஜேந்திரனை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி