பென்னாகரம்: மு. அமைச்சர் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி ஏரியூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நேற்று (நவம்பர் 21) வெள்ளிக்கிழமை மாலை, அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி அதிமுக முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய அமைச்சர் அன்பழகன், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி களப்பணி ஆற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி