இந்த குழு தர்மபுரி பேருந்து நிலைய பகுதியில் ஆய்வு செய்தபோது, பாசிமணி & ஊசிமணிகள் விற்பனை செய்து கொண்டிருந்த 3 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட. 14 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எந்த வகையான நிறுவனத்திலும் பணி அமர்த்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
14 முதல் 18 வயது பாதுகாப்புக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான, தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் 20 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.