தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி கிரிஜா (31) நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரிஜா உயிரிழந்தார். இது குறித்து ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.