தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுநாயக்கனல்லி கிராமத்தை சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மனைவி சுசிலா இவர் நேற்று(மார்ச் 22) மாலை அவரது விவசாய நிலத்தில் அமைந்துள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக சென்று உள்ளார். வெகு நேரம் ஆகியும் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் தேடிப் பார்த்தபோது கிணற்றில் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.

 இதை அறிந்து உடனடியாக அவரை விட்டு பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் சுசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பென்னாகரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுசிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி