தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அம்மாபாளையம் கிராமத்தில், காந்தா என்பவர் தனது வீட்டின் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பாப்பிரெட்டிப்பட்டி காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று திங்கட்கிழமை மாலை காந்தாவின் வீட்டில் சோதனை நடத்தியதில், 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற காந்தாவை காவலர்கள் கைது செய்தனர்.