தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வியாழக்கிழமை (பிப். 05) காலை 9.30 மணி நிலவரப்படி, வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்தாலும், பயணிகள் அதிகாலையிலேயே அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்கின்றனர்.