தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மழை அளவைப் பொறுத்து நீர்வரத்து மாறி மாறி வந்துள்ளது. இந்நிலையில், 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று (ஜனவரி 10) சனிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 700 கன அடியாக குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.