தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழையைப் பொறுத்து நீர்வரத்து மாறி மாறி காணப்படுகிறது. இந்நிலையில், நவ. 24 காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 6500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.