தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக கர்நாடக மாநிலம் அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 43,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 7 மணி அளவில் 32,000 கனஅடியாக குறைந்துள்ளது. தொடர்ந்து காவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் காவிரி கரையோரங்களில் ரோந்துபணியும் மேற்கொண்டு வருகின்றனர்.