தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையைப் பொறுத்து நீர்வரத்து மாறி மாறி வந்துள்ளது. நேற்று வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடியாக சரிந்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு பாறை திட்டுகளாக காணப்படுகிறது.