தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீரின் அளவு சரிந்து நேற்று 700 கன அடியாக இருந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஓகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக மார்ச் 19 இன்று ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.