நல்லம்பள்ளி அடுத்த நத்தம்அள்ளி பாறைக்கொட்டாய் பகுதியில், குடியிருப்பு மற்றும் உயர்மின் கோபுரங்கள் உள்ள இடத்தில் முறைகேடாக அனுமதி பெற்று செயல்படும் தனியார் கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி இன்று புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள் இந்த கல் குவாரியால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், பொது மக்களால் நிம்மதியாக வீடுகளில் இருக்க முடியவில்லை ஒலி மாசுபாடு, சுற்றுப்புற சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும் கனரக வாகனங்கள் செல்வதால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.