தர்மபுரி: போலீஸ் என கூறி 2 பேர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சி எரிமலை இருளர் காலனியில் நேற்று சி.ஐ.டி போலீஸ் என கூறி 2 பேர் விவசாயியை தாக்கி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதையடுத்து கிராமமக்கள் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மற்றொருவர் தப்பியோடினார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். 

அவர் பாலக்கோடு ரெயில் நிலைய பகுதியை சேர்ந்த ஜெயகணேஷ் என்பதும், தப்பியோடியவர் கக்கன்ஜிபுரம் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் போலீஸ் இன்ஃபார்மர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் கொலை முயற்சி, ஆள்மாறாட்டம், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து ஜெயகணேஷ், தப்பியோடிய சக்தி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இதற்கிடையில் ஜெயகணேசை தாக்கியதாக கிராம மக்கள் 10 பேர் மீதும் காவலர்கள் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி